மதுரை மேயர் மீது நடவடிக்கை இல்லை: கருணாநிதி முடிவு
சென்னை:
மதுரை மேயர் செ. ராமச்சந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை திமுகவில் மோதல் முற்றியுள்ளது. கருணாநிதியின் மகன்களான ஸ்டாலின் மற்றும் அழகிரிஆதரவாளர்களுக்கு இடையே பூசல் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மூத்த திமுக தலைவரான பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் கட்சியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார். ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என்றுமதுரை மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
மதுரை மேயரின் பேச்சால் கோபமடைந்த கருணாநிதி, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்இல்லாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து தான் அப்படிப் பேசவில்லை என்று கூறிய ராமச்சந்திரன், திமுகவிலிருந்து விலகவும் மாட்டேன்என்றும் பல்டி அடித்தார்.
இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கருணாநிதி கை விட்டு விட்டார். மேலும்,மதுரை திமுக அதிருப்தி தலைவர்களை சென்னைக்கு வரவழைத்து பேச்சு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே திமுக எம்.பி. அக்னிராஜு, கட்சிக் கட்டளையை மீறி தனியாக கூட்டம் நடத்தியதால் தான்கோஷ்டிப் பூசல் அதிகமாகியுள்ளதாக கூறியுள்ள கருணாநிதி, அவரது நடவடிக்கை குறித்து விசாரிக்கப்படும்என்றும் கூறியுள்ளார்.
எனவே, இப்போதைக்கு திமுகவில் பூசல் கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருப்பினும்இப்போதே சரியான, உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால் பெரிய அளவிலான பிளவுஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications