போராட்டம் நடத்திய மதுரை மாணவிகள் கைது
சென்னை:
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் ஆணையை எரித்து தமிழகம் முழுவதும்போராட்டம் நடத்தினர். மதுரையில் இந்தப் போராட்டத்தை நடத்திய மீனாட்சி கல்லூரி மாணவிகள் கைதுசெய்யப்பட்டனர்.
அரசுக் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்குஆதரவாக, பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஆகஸ்ட் 29ம்தேதி நடக்கிறது.
கல்லூரி ஆசிரியர்கள் போராட்டக் குழுவின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திஉடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 29ம் தேதிமனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
அதேபோல, செப்டம்பர் 4ம் தேதி சென்னை, சேலம், வேலூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், மதுரை மற்றும்திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் ஆணையை எரித்து தமிழகம்முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள், மாநிலக் கல்லூரி மாணவர்களும்இந்தப் போராட்டத்தை நடத்தினர். மாணவர்கள் கடற்கரை சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டமும்நடத்தினர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. திருச்சியிலும் இதே போன்ற போராட்டம் நடந்தது.மதுரையில் அரசின் உத்தரவை எரித்த மீனாட்சி கல்லூரி மாணவிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆசிரியர்- மாணவர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள் அனைத்தும் இரண்டாவதுவாரமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications