வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாகப்பாவை கொல்வேன்: கேசட்டில் வீரப்பன் மிரட்டல்
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவித்தபோது எனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அந்தக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் சிறையில் உள்ள பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் தேசியவாத இயக்கத்தினரை விடுவிக்கவேண்டும் என வீரப்பன் கோரிக்கை விடுத்திருப்பதாகக் தெரிகிறது.
நாகப்பாவைக் கடத்தியபோது வீரப்பனே அவரது மனைவியிடம் ஒரு கேசட் மற்றும் கடிதம் தந்துவிட்டுச் சென்றதாகக்கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இரு கேசட்டுகளைத் தந்துள்ளான் வீரப்பன். ஒன்றில் கன்னடத்தில் பேசியுள்ள அவன்இன்னொன்றில் தமிழில் பேசியுள்ளான். இரு மாநில அரசுகளுக்கும் தலா ஒரு கேசட் தந்துவிட்டுச் சென்றுள்ளான்.
அதில் உள்ள விவரங்களை வெளியிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தக் கேசட் அதிரடிப்படையிடம்ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறிக் கொண்டிக்கிறது கர்நாடக அரசு.
அந்தக் கேசட்டில் காவிரி, திருவள்ளுவர் சிலை விவகாரங்கள் குறித்தும் வீரப்பன் பேசி இருப்பதால் கர்நாடக அரசு உண்மையைமூடி மறைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், நாகப்பாவின் வீட்டினர் அதை போட்டுக் கேட்டுள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த கேசட் 55விநாடிகள் ஓடுகிறது என்று தெரியவந்தது. அதில் ராஜ்குமாரை விடுதலை செய்தபோது தனக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளைகர்நாடக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதால் நாகப்பாவைக் கடத்தியுள்ளதாக வீரப்பன் தெரிவித்துள்ளான்.
(காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் நலனை கர்நாடகம் புறக்கணிப்பது, பெங்களூரில் ஏரிக் கரையில் மூடப்பட்டுக் கிடக்கும்திருவள்ளுவர் சிலையைத் திறப்பது போன்ற விஷயங்களைத் தான் ராஜ்குமாரைக் கடத்தியபோது முக்கியப் பிரச்சனைகளாகக்கிளப்பினான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவனுக்கு சில உறுதிமொழிகளை கர்நாடக அரசு தந்ததாகத் தெரிகிறது. இதைத்தான் இப்போது அவன் நினைவூட்டியுள்ளான்.)
மேலும் தமிழக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்,கொளத்தூர் மணி, நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்றும் அவன் கோரியுள்ளதாகத்தெரிகிறது.
மேலும் அதிரடிப் படையினரின் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வீரப்பன் கூறியுள்ளான்.அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் நாகப்பாவைக் கொன்றுவிடுவேன் என்றும் வீரப்பன் மிரட்டியுள்ளான்.
என்னை தொடர்ந்து ஏமாற்றி வரும் வாக்குத் தவறிவிட்ட அரசுகளுக்கு பாடம் புகட்டுவேன் என்றும் கூறியுள்ளான்.
இறுதியாக, எனது கோரிக்கைகள் குறித்து மேலும் விவரமாக அடுத்த கேசட்டில் பேசுவேன். விரைவில் அது உங்களுக்கு வந்துசேரும் என்று குறிப்பிட்டுள்ளான் வீரப்பன் என்று நாகப்பா வீட்டினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications