கலாமுக்கு அரசு கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை:
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்குஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு, தமிழக கல்லூரி ஆசிரியர்கள் கடிதம்எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதை எதிர்த்து கல்லூரி ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தங்களது அடுத்த கட்ட முயற்சியாக, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். தமிழ்நாடுஅரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில்,
ஏற்கனவே அரசுக் கல்லூரிகள் அனைத்தும், பல்கலைக்கழக பாடத் திட்டத்தையே பின்பற்றி வருகின்றன.பல்கலைக்கழகத்தில் என்ன போதிக்கப்படுகிறதோ, அதுவே அரசுக் கல்லூரிகளிலும் போதிக்கப்படுகிறது.
எனவே பல்கலைக்கழகங்களுடன் சேருவதால் கல்வித் தரம் உயரும் என்பது தவறான வாதமாகும்.
அரசுக் கல்லூரிகளை, பல்கலைக்கழகத்தில் இணைப்பதால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டார் மற்றும்பழங்குடி இன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களால் அதிக அளவில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாது. அவர்களது படிப்பு தடைபடும்.
அரசின் நிதிச் சுமை காரணமாக, உயர் கல்விப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு, மாணவர்களின் படிப்பு மற்றும்ஆசிரியர்களின் நலன் ஆகியவற்றில் விளையாட முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால் அதனால் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பாதிக்கப்படுவர் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications