நாகப்பாவின் ஆதரவாளர் தற்கொலை
மைசூர்:
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பாவின் ஊரான சாம்ராஜ்நகரைச் சேர்ந்த வீரேஷ் (வயது 22). இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகப்பா ஜாதியினர் மிரட்டல்:
இதற்கிடையே நாகப்பாவை மீட்க கர்நாடக அரசு தவறினால் முதல்வர் கிருஷ்ணாவைக் கண்டித்து மாநிலம் முழுவதும்போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடகத்தின் முக்கிய சமூகமான லிங்காயத்து ஜாதியைச் சேர்ந்த அமைப்புகள்அறிவித்துள்ளன.
கர்நாடகத்தில் 2 ஜாதியினர் தான் மிக முக்கியமானவை. ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து ஆகியவை. இரு ஜாதியினருக்கும் இடையேஎப்போதும் ஒத்துப் போவது இல்லை. பெரும்பான்மையாக உள்ள இந்த இரு ஜாதியினரும் தான் கர்நாடகத்தில் அரசு அமைவதைநிர்ணயிக்கின்றனர். இந்த இரு ஜாதியினர் தான் மாறி மாறி முதல்வர் பதவியில் இருப்பது வழக்கம்.
கடந்த ஜனதா தள ஆட்சியில் லிங்காயத்துப் பிரிவைச் சேர்ந்த படேல் முதல்வராக இருந்ததால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்ஒக்கலிகாவான கிருஷ்ணாவை முதல்வராக்கியது.
கடத்திச் செல்லப்பட்ட நாகப்பா லிங்காயத்து ஆவார். அதனால் தான் படேல் அரசின் அவருக்கு இடம் தரப்பட்டது. இப்போது ஒக்கலிகாமுதல்வர் ஆட்சியில் உள்ளதால் நாகப்பா விவகாரத்தில் தீவிரம் காட்ட மாட்டார் என்று லிங்காயத்துகள் நினைக்கின்றனர்.
இதனால், கிருஷ்ணா அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய வீர சைவா மகாசபை (லிங்காயத்து அமைப்பு)அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் பசவராஜ் கூறுகையில், அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசை எதிர்த்து நாங்கள்போராட்டத்தில் ஈடுபடுவோம். ராஜ்குமாரை மீட்க என்னென்ன நடவடிக்கை எடுத்தார்களோ அதே நடவடிக்கையை இப்போதும் எடுக்கவேண்டும்.
நாகப்பாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வெறும் பொம்மைகள் தான். அவர்களுக்கு எந்தப் பயிற்சியும் தரப்பட்டதில்லைஎன்றனர்.
இதற்கிடையே நாகப்பாவுடன் போலீஸ்காரர் யாரையும் வீரப்பன் கும்பல் கடத்திச் செல்லவில்லை என கர்நாடக அரசுவிளக்கமளித்துள்ளது.
நகாப்பாவின் மனைவி ரேடியோவில் பேச்சு:
இதற்கிடையே கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் மனைவி பிரமிளா ஆல் இந்தியா ரேடியோ மூலம் வீரப்பனுக்கு அழுதவாறேகோரிக்கை விடுத்துள்ளார்.
வீரப்பன் அண்ணா, உங்கள் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் கணவரை விட்டுவிடுங்கள். கடவுளிடம்உங்கள் நலனுக்காக நான் பிரார்திக்கிறேன் என்று அவர் வீரப்பனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது உருக்கமான பேச்சைஆல் இந்தியா ரேடியோ நேற்று 3 முறை ஒலிபரப்பியது.
இன்றும் அவரது பேச்சு மீண்டும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications