தாய்லாந்து பேச்சுவார்த்தை: புலிகள் குழு அமைப்பு
கொழும்பு:
தாய்லாந்தில் அடுத்த மாதம் 16ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ஆண்டன் பாலசிங்கம் தலைமையிலான 4 பேர்குழுவை விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
புலிகளின் சட்ட ஆலோசகர் வி.ருத்ரகுமார், மறுவாழ்வு நிபுணர் டாக்டர் ஜே மகேஸ்வரன், பாலசிங்கத்தின் மனைவி அடேல் ஆகியோர்இதில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பாலசிங்கம் தவிர மற்றவர்கள் யாரும் புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் இல்லை. குறிப்பாக புலிகளின் அரசியல்பிரிவுத் தலைவர்கள் யாரும் இந்தக் குழுவில் இடம்பெறாதது ஆச்சரியம் அளித்துள்ளது.
முன்னதாக தங்களது அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள புலிகள் அனுப்புவர் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவசரப்பட்டு நாட்டுக்கு வெளியே எந்த முக்கியத் தலைவரையும் அனுப்ப பிரபாகரன் விரும்பவில்லைஎன்று தெரிகிறது.
இலங்கையில் இருந்து அகதியாக வெளியேறிவிட்ட ருத்ரகுமார் புலிகளுக்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வழக்குகளை நடத்தியவர்.
ஒரு மாதம் மட்டுமே தடை நீக்கம்:
இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வசதியாக புலிகள் மீதான தடையை ஒரு மாதம் மட்டுமே நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதைபுலிகள் எதிர்த்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் வெளியேறினால், மீண்டும் தடையைப் போடவும் இலங்கை முடிவுசெய்துள்ளது.
தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தடையை நீக்குவதை ஏற்க முடியாது என்று புலிகள்கூறியுள்ளனர்.
பிரபாகரனை பிடிக்க ஜெ. கோரிக்கை:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேணடும் என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் கூறினார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய பிரபாகரைனப் பிடித்தாக வேண்டும்.இலங்கையில் நடந்து வரும் அமைதி முயற்சிகளைக் காட்டி இந்தக் கொலைக் குற்றத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. புலிகளைஆதரித்ததற்காக பொடா சட்டத்தின் கைது செய்யப்பட்ட வைகோவின் கட்சியைத் தடை செய்ய ஆதாரங்களைத் திரட்டிவருகிறோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications