நாகப்பா கடத்தலுக்கு உதவிய வீரப்பன் கூட்டாளி கைது
பெங்களூர்:
நாகப்பா கடத்தலுக்கு உதவிய வீரப்பனின் கூட்டாளி ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு நான்கு நாட்களாகியும் வீரப்பன் இருக்குமிடம் குறித்துஎந்தவித துப்பும் கிடைக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நாகப்பாவை வீரப்பன் கும்பல் கடத்துவதற்கு உதவி செய்த மதநாயக் என்ற விவசாயியைஅதிரடிப்படையினர் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட அன்று மதநாயக் சந்தேகத்திற்கிடமான வகையில் காமகெரேவிலுள்ள நாகப்பாவின் வீட்டுப் பக்கம்திரிந்துள்ளார். நாகப்பா எப்போது வருகிறார், போகிறார் என்பது குறித்தும் நோட்டம் விட்டுள்ளார்.
பின்னர் அன்று இரவு 9.45 மணிக்கு கொள்ளேகாலிலிருந்து நாகப்பா திரும்பி வந்த போது இது குறித்துவீரப்பனுக்கு மதநாயக் தகவல் கொடுத்து விட்டு, நாகப்பாவின் வீட்டில் யார் யாரெல்லாம் உள்ளனர் என்பதுகுறித்தும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு நாகப்பாவின் வீட்டருகே மறைந்திருந்த வீரப்பன் கும்பல், மதநாயக் சிக்னல் கொடுத்த பிறகு தான்அந்த வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து தாக்கி நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ளது.
மதநாயக்கிடம் வீரப்பன் குறித்து அதிரடிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே போலீஸ் நடமாட்டம் குறித்து கோழிபாளையாவைச் சேர்ந்த முத்து என்பவர் அடிக்கடிவீரப்பனுக்குத் தகவல் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து முத்துவையும் போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வீரப்பன் கும்பல் மறைந்துள்ள இடம் குறித்து சில தகவல்கள் தெரிய வந்துள்ளன.
புதிபடகா என்ற இடத்தில் வீரப்பன் மற்றும் அவனது கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடமாடி வருவதாக அவர்களைஅங்கு பார்த்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்து நாகப்பா குடும்பத்தினரிடம் தான் அந்த கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் இத்தகவலை அதிரடிப்படை போலீஸாரிடம் சொல்லப் போவதில்லை என்று நாகப்பா குடும்பத்தினர்முடிவு செய்துள்ளனர்.
அதிரடிப்படையினரிடம் இதுகுறித்துத் தெரிவித்தால், வீரப்பன் கும்பலுக்கு நெருக்கடி ஏற்பட்டு, அதனால்வீரப்பன் கோபமுற்று, நாகப்பாவின் உயிருக்கு ஏதாவது ஆகி விடலாம் என்று அவரது குடும்பத்தினர்பயப்படுகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications