நதிகள் தேசியமயம்: தமிழக கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகோரியிருப்பதை கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.

டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து திடீர் வெளிநடப்பு செய்த ஜெயலலிதா நேற்று நிருபர்களிடம்பேசியபோது மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை தேசியமயமாக்குதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.

இதை கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. நடைமுறை ரீதியில் பார்க்கும் போது இது சாத்தியமேஇல்லை என்று கர்நாடக சட்ட அமைச்சர் சந்திரே கவுடா கூறினார்.

மேலும் ஜெயலலிதாவின் பிடிவாதக் குணம் காரணமாக பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையக்கூட்டத்திலிருந்து அவர் வெளிநடப்பு செய்து ஆணையத்தின் மதிப்பையே கெடுத்து விட்டார் என்றும் கவுடாகுற்றம் சாட்டினார்.

கர்நாடக அணையில் மொத்தமே 59 டி.எம்.சி. நீர் மட்டும் உள்ள நிலையில் எப்படி நாங்கள் தமிழகத்திற்கு 30டி.எம்.சி. நீரைக் கொடுக்க முடியும் என்றும் கவுடா கேள்வி எழுப்பினார்.

கர்நாடகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது வறட்சி பாதித்துள்ள நிலையில் எங்கள் விவசாயிகளைவாட வைத்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதில் அர்த்தமே இல்லை என்றார் கவுடா.

பிரதமர் தலையிட வேண்டும் - மதிமுக:

இதற்கிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று மதிமுக கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருதி காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டுமென்று கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வாஜ்பாயை மதிமுக அவைத் தலைவரான எல்.கணேசன் வற்புறுத்தியுள்ளார்.

காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஜெயலலிதாவைக் கண்டித்த கணேசன், அவர்பொறுமையுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு காவிரி பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும் என்றுசென்னையில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் டெல்லிக்குச் செல்லும் முன் காவிரி விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகளை அழைத்து ஜெயலலிதா பேச்சுநடத்தவில்லை என்றும் கணேசன் குற்றம் சாட்டினார்.

மதிமுகவை மத்திய அரசே தடை செய்யும் என்றும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும்ஜெயலலிதா கூறி வருகிறார். முதலில் அவர் ஆதாரங்களைக் காண்பிக்கட்டும். அப்புறம் நாங்கள் அதற்குப் பதில்சொல்கிறோம் என்றார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+