பதவிகளை காவு வாங்கிய அதிமுக கோஷ்டிப் பூசல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் நடந்து வரும் அதிமுக கோஷ்டிப் பூசல் இதுவரை 2 அமைச்சர்களை காவு வாங்கிவிட்டது.

இந்த மாவட்டத்தின் அதிமுக செயலாளராக இருந்த பாண்டுரங்கனை அமைச்சராக்கினர் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப்பார்த்தால் காலில் விழும் அமைச்சர்கள் மத்தியில் இவர் கன்னத்தில் போடுக் கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

ஜெயலலிதாவை பார்த்தார் கன்னத்தில் படார் படார் என்று அடித்துக் கொள்வது இவர் ஸ்டைல். கன்னத்தில் அடித்தவாரே தனது120 கிலோ உடம்புடன் தரையில் விழுந்து அம்மா.. அம்மா என்று கதவறுவார். இது தான் முதல்வருக்கு இவர் செய்யும்வழக்கமான மரியாதை.

இவ்வளவு மரியாதை செய்து வந்தபோதும் கூட இவரிடமிருந்து முதலில் வேலூர் மாவட்டத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.தொடர்ந்து அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.

இவரது பதவிப் பறிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது வில்வநாதனின் கோஷ்டி தான். சசிகலாவின் கணவர் நடராஜன் மூலம்காய் நகர்த்திய வில்வநாதன், பாண்டுங்கனின் மாவட்டச் செயலாளர் பதவியையும் அமைச்சர் பதவியையும் பறிக்கச் செய்தார்.

பாண்டுரங்கனைக் கண்டாலே நடராஜனுக்கு ஆகாது. இதற்குக் காரணம் பாண்டு தலைமையில் நடராஜன் கார் மீது ஒரு காலத்தில்நடந்த கல்வீச்சு தான்.

முன்பு நடராஜனை அதிமுக செயல்பாடுகளில் இருந்து ஜெயலலிதா நிறுத்தி வைத்த போது அவர் எங்கு சென்றாலும் அதிமுகவினர்அவருக்கு எதிராக கல்வீசி வந்தனர்.

அதே போல வேலூருக்கு வந்த நடராஜனை வெறுப்பேற்றுமாறு அதிமுக தலைமையில் இருந்து வந்த உத்தரவை ஏற்ற பாண்டுதனது கட்சியின் தொண்டர்களுடன் சேர்ந்து நடராஜனின் கார் மீது கல் எறி வைபவம் நடத்தினார்.

பின்னர் மடமடவென முன்னேறி அமைச்சரும் ஆனார். ஆனாலும் கூட சசிகலாவுக்கு பாண்டுவைக் கண்டால் எரிச்சல் தான்.

வில்வநாதன் கோஷ்டியின் தொடர் புகார்கள் காரணமாக பாண்டுவின் மாவட்டச் செயலாளர் பதவியும் பின்னர் அமைச்சர்பதவியும் பறிக்கப்பட்டது.

கடா மீசை கொண்ட பாண்டுவிடம் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி இன்னொரு கடா மீசையான வில்வநாதனக்கு வந்துசேர்ந்தது. அடுத்ததாக பாண்டுவிடம் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவியும் விலவநாதனுக்கு வந்தது.

ஆனால், பாண்டுவின் பதவிப் பறிப்புக்குக் காரணமாக இருந்த வில்வநாதனே இப்போது தனது பதவியை இழந்துள்ளார். இதற்குக்காரணம் பாண்டு தான்.

வேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் வாய் தவறி ஜெயலலிதாவை முன்னாள் முதல்வர் என்றும் கருணாநிதியை முதல்வர்என்றும் குறிப்பிட்டார். உடனே அதைத் திருத்திக் கொண்டுவிட்டார். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்து பாண்டுவின்கோஷ்டியினர் அப்போதே இவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இது தொடர்பாக போயஸ் தோட்டத்துக்கு புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன. தந்திகள், கடிதங்கள் என புகார்கள் குவியஆரம்பித்தன. இதை தலைமை தாங்கி நடத்தியது பாண்டுவின் கோஷ்டி.

மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்குவதில் அதிமுகவினருக்கு இவர்உதவவில்லையாம். மற்ற கட்சிகளில் உள்ள தனது நண்பர்களுக்கு டெண்டர்கள் வழங்கி உதவி வந்துள்ளார்.

இது குறித்த புகாரும் ஜெயலலிதாவை எட்டியவண்ணம் இருந்தது. ஆனால், வாணியம்பாடி இடைத் தேர்தலில் சிறப்பாகப்பணியாற்றியதால் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார் வில்வநாதன்.

ஆனால், கருணாநிதியை முதல்வர் என்று அவர் பேசியதை எதிர்க் கோஷ்டியான பாண்டுரங்கன் ஊதிப் பெரிதாக்கிவிட பதவிகாலியாகிவிட்டது.

முற்பகல் செய்யின்... என்ற பழமொழி வில்வநாதன்- பாண்டுரங்கன் கோஷ்டிகளுக்கு மிகச் சரியாக பொறுந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+