காட்டுக்குச் செல்லத் தயார்: நெடுமாறன்
சென்னை:
கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானால் வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க காட்டுக்குச்செல்லத் தயார் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறை செல்லும்போது நிருபர்களிடம்கூறுகையில்,
நான் போய் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசியதால் தான் அதிரடிப் படையின் தலைவர் கெம்பைய்யாவை அவர்மாற்றியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்.
எனக்கு கிருஷ்ணாவுடன் அவ்வளவு செல்வாக்கு இருந்திருந்தால், நான் அதை ஒரு காவல்துறை அதிகாரியை மாற்றுவதற்காகபயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்தச் செல்வாக்கை காவிரியில் நீரைத் திறந்துவிடத் தான் பயன்படுத்தியிருப்பபேன்.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகத்தில் தமிழர்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டது. அதனால் அவரை மீட்க காட்டுக்குச்செல்ல ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை.
இதனால் காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சிறையில் இருந்து வெளியே வர விரும்பவில்லை. நான்குற்றமற்றவன் என்பதை நிரூபித்துவிட்டுத் தான் சிறையில் இருந்து வெளியே வருவேன்.
அதே நேரத்தில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு ஆபத்தான சூழல் ஏதும் மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் காட்டுக்குச் செல்லத் தயார்என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications