ஜெயலலிதாவின் ஈரோடு பயணம் ரத்தாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் விவகாரம் காரணமாக எழுந்துள்ள பிரச்சினையால் ஈரோட்டில் இந்த மாதம் மேற்கொள்ளவுள்ள தனதுசுற்றுப்பயணத்தை பாதுகாப்பு கருதி முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்து விடுவார் என்று தெரிகிறது.
ஜெயலலிதா இந்த மாத இறுதியில் ஈரோடு செல்வதாக உள்ளார். ஆனால் தற்போது வீரப்பன் விவகாரம்வெடித்திருப்பதால் அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தான் வீரப்பனின் வனப் பகுதி உள்ளது. அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும்வீரப்பன் விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஈரோடு சென்றால் அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று அரசுகருதுகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு பயணத்தை ஜெயலலிதா ரத்து செய்து விடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications