வீரப்பனின் கூட்டாளி சரணடைந்தான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனின் கூட்டாளியான முருகேசன் என்பவன் இன்று தர்மபுரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

இன்று பிற்பகல் அவனாகவே வந்து சரணடைந்தான்.

இந் நிலையில் நாகப்பாவை மீட்க வீரப்பனுடன் பேச தூதரை அனுப்பும் திட்டம் இப்போதைக்கு இல்லை என கர்நாடக அரசுகூறியுள்ளது.

முதலில் தமிழக அரசு தான் வீரப்பனுடன் பேச்சு நடத்தத் தயாராக இல்லை என்று அறிவித்தது. ஆனால், கர்நாடக அரசுநாகப்பாவின் உயிரை மனதில் கொண்டு தூதரை அனுப்பத் தயாரானது.

தூதர்களாக செல்ல முன் வந்த மைசூர் வழக்கறிஞர்களான வேணுகோபால், சுப்பு கிருஷ்ணா ஆகியோருடன் கர்நாடக முதல்வரேநேரில் பேச்சும் நடத்தினார். மேலும் கொளத்தூர் மணியின் தம்பியை தூதராக அனுப்புவதும் குறித்தும் கர்நாடக அரசுஆலோசித்தது.

இந் நிலையில் வீரப்பனிடம் இருந்து ஏந்தவிதமான தகவலும் இல்லாததால் அவனிடம் தூதரை அனுப்பும் திட்டம் இல்லை எனஇப்போது கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

முதல்வர் இவ்வாறு வெளியில் பேசினாலும் கூட எதற்கும் ஒரு தூதரைத் தயாராக வைத்திருக்க கர்நாடக போலீசார் முடிவுசெய்துள்ளனர். பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியையே அனுப்பலாமா என்றும் கர்நாடகம் யோசித்துவருகிறது.

இதுவரை பீஜப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் அவரை தூதராகஅனுப்ப அரசு தயாராகி வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறையில் இருக்கும் கொளத்தூர் மணி மூலமாக அரசு ஒரு ரேடியோ கோரிக்கையை வீரப்பனுக்கு அனுப்பியுள்ளது.சிறையில் இருக்கும் மணி அதில் வீரப்பனுக்கு கோரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

தனது பேச்சில் நாகப்பாவின் உடல் நிலையையும், கர்நாடகத் தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நாகப்பாவை விடுவிக்கவேண்டும் என வீரப்பனுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மணியின் இந்தப் பேச்சை கோயம்புத்தூர் வானொலி நிலையம் பலமுறை தொடர்ந்து ஒலிபரப்பி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க வீரப்பனைத் தேடும் வேட்டையில் இரு மாநில அதிரடிப் படையினரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்பட பல்வேறு உடல் உபாதைகள் உண்டு. அவரைக் கடத்தியபோது அவரது மருந்துகளைவீரப்பன் எடுத்துச் செல்லவில்லை. இதனால் அவர் சாப்பிடும் மருந்துகளின் விவரத்தை ரேடியோ மூலம் வீரப்பனுக்குநாகப்பாவின் மனைவி தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த மருந்துகளை வாங்க வீரப்பன் யாரையாவது அனுப்பலாம் என்று அதிரடிப்படையினர் நம்புகின்றனர்.

இந்த மருந்துகளை வாங்க யாராவது வந்தால் உடனே தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு வனப் பகுதிகளை ஒட்டியுள்ளஅனைத்து மெடிக்கல் ஷாப்களுக்கும் அதிரடிப்படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+