தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகம் சம்மதம்
பெங்களூர்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விட கர்நாடக அரசுஒப்புக்கொண்டுள்ளது.
நேற்றிரவு வரை நீடித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த இரு அமைச்சரவைக்கூட்டங்களிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்தார்.
தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிடுவதால் விவசாயிகள், அரசியல் கட்சிகளிடம் இருந்து கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில்விவசாயிகளுக்கான கடன் வட்டியை கர்நாடகம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக முதல்வர் கிருஷ்ணா முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கெளடாவுக்கு மாண்டியா,மைசூர் மாவட்டங்களில் காவிரி பாயும் கிராமப் பகுதிகளில் செல்வாக்கு அதிகம். கெளடாவின் ஆதரவு இருந்தால் இந்தப் பகுதியில்ஏற்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்திவிட முடியும் என கிருஷ்ணா நினைக்கிறார்.
இதையடுத்து அவரை நேற்றிரவு கிருஷ்ணா நேரில் சென்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் கர்நாடகத்தின்நலனை எக் காரணம் கொண்டும் தியாகம் செய்ய மாட்டோம். கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கப்படும்.
எந்த சமயத்திலும் மக்களுக்கு விரோதமாக அரசு செயல்படாது. எனவே பொது மக்கள் அமைதி காக்க வேண்டும். உடனே காவிரிஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்ட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications