வீரப்பன் காட்டில் கிடந்த பிணம்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
கடத்தல் மன்னன் வீரப்பன் நடமாட்டம் உள்ள ஈரோடு மாவட்டம் வறட்டுப்பாளையம் என்ற இடத்தில்அடையாளம் தெரியாத 50 வயது நபரின் பிணத்தை அதிரடிப்படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
கொலையுண்ட நபர் யார் என்று தெரியவில்லை.
வீரப்பன் குறித்து தகவல் கொடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்த கிராம மக்கள் மத்தியில்பேச்சு எழுந்துள்ளது.
மத்திய படைகள் வந்தன:
இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் கர்நாடக, தமிழக அதிரடிப் படையினருக்கு உதவ 5 கம்பெனி பாரா மிலிட்டெரிப் படைகளை மத்தியஅரசு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி கூறினார்.
இந்தப் படையினர் கர்நாடக அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்படுவர் என்றார்.
-->












Click it and Unblock the Notifications