கல்யாணத்திற்கு முன்பு பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறேன்.. சீரியல் நடிகர் ஓபன் பேச்சு.. வந்தாச்சு விவாதம்
சென்னை: சில நடிகர்கள் நடிகைகள் பேட்டிகளில் பேசும்போது சில விஷயங்களை எதார்த்தமாக பேச கடைசியில் அதுவே சர்ச்சையை ஏற்படுத்திவிடும். அதேபோலத்தான் இப்போது 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத டப்பிங் சீரியலான உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் நடிகர் ராம்குமார் பேசியதும் இணையத்தில் அதிகமான விவாதங்களை சந்தித்து வருகிறது.
90 கிட்ஸ்கள் குழந்தைகளாக இருக்கும்போதே பாலிமர் தொலைக்காட்சியில் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் ரொம்ப வருஷமாக ஒளிபரப்பாகி வந்தது. அதில் வயதான தொழிலதிபரை ஒரு இளம்பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்வார். பிறகு ஹீரோ ஹீரோயினிக்குள் ஏற்படும் காதல், பிரச்சனை வைத்து தான் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல்
பல வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பானாலும் அந்த சீரியலுக்கான தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தன. அதிலும் அந்த சீரியலின் டைட்டில் பாடலான "உள்ளம் கொள்ளை போகுதடா உன் அழகில்" என்ற வரிகள் பலருக்கும் பிடிக்கும். இப்ப கூட சிலருடைய ரிங்டோனாக அந்த பாடல்கள் இருக்கிறது. இப்படி இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாலிவுட் நடிகர் ராம் கபூர் தான் இப்போ தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசும் போது தன்னுடைய இளமை காலம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

நடிகர் ராம் கபூர் பேட்டி
சமீபத்திய பேட்டியில் ராம் கபூர் பேசும்போது, "திருமணத்திற்கு முன்பு நான் ஒரு பிளேபாய் போலவே வாழ்ந்தேன். பல பெண்களுடன் உறவில் இருந்திருக்கிறேன்... அப்போது வாழ்க்கையை வேறு விதமாக பார்த்தேன். ஆனால் என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு நான் முழுமையாக மாறிவிட்டேன். என்னுடைய மனைவி கௌதமி கபூர் என் வாழ்க்கையில் வந்த பிறகு தான் நான் முழுமையாக மாறினேன்" என்று அவர் சொல்லியிருந்தார். இதை கேட்டதும் நெட்டிசன்கள் அவரை கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

ரசிகர்கள் கருத்து
நாங்கள் சீரியலில் உங்களை பார்த்ததும் ஒன்றும் தெரியாத அப்பாவி என்று நினைத்தோமே ஆனால் நீங்க பிளேபாய் என்று நீங்களே சொல்லி இருக்கீங்களே என்று சிலர் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஒரு காலத்தில் பெண்கள், பார்ட்டி, நண்பர்கள் என்று இருந்த வாழ்க்கை இன்று மனைவி குழந்தைகள் வந்த பிறகு மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறார். இதுவும் நல்ல விஷயம் தான் என்று அவருக்கு சப்போர்ட்டும் கொடுக்கிறார்கள்.

நடிகர் ராம்கபூர் குடும்பம்
ராம் கபூர் மற்றும் கௌதமி கபூர் இருவரும் ஒரு ஹிந்தி சீரியலில் நடித்த போதுதான் காதலிக்க ஆரம்பித்தார்களாம். பிறகு குடும்ப சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகளும் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் தங்களுடைய குடும்ப புகைப்படங்களை அடிக்கடி ராம்கபூர் பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரையில் மீண்டும் சோகம்.. பிரபல சீரியல் நடிகர் 41 வயதில் திடீர் இறப்பு! உருக வைத்த சம்பவம்
அதே நேரத்தில் நடிகர் ராம் கபூருக்கு இப்போதுதான் 50 வயது ஆகிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அவர் 40 வயதிற்கு மேலே உள்ள நபராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடல் எடை குறைத்த புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து "வாவ்" சொல்ல வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications