சின்னத்திரையில் மீண்டும் சோகம்.. பிரபல சீரியல் நடிகர் 41 வயதில் திடீர் இறப்பு! உருக வைத்த சம்பவம்
சென்னை: மலையாள சீரியல்கள் மூலம் பரிச்சயமான முகமாக இருந்த நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார் என்ற செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 41 வயதிலேயே அவர் உயிரிழந்தது பலரையும் உருக வைத்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சாலக்குடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சித்தார்த், கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். ஆரம்பத்தில் சிகிச்சைக்கு நல்ல முன்னேற்றம் இருந்ததாம், ஆனால் திடீரென உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைப்பயணம்
சித்தார்த் தனது கலைப்பயணத்தை தொகுப்பாளராக தொடங்கியவராம். கல்லூரி காலத்திலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததாம், அதன் பிறகு சீரியல் உலகில் காலடி எடுத்து வைத்தார். மலையாள தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற "கஸ்தூரிமான்", "பாக்கியஜாதகம்" போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அவரது இயல்பான நடிப்பு, எளிமையான முகபாவனை, குடும்பக் கதைகளில் கலந்த ரியாக்சன் ஆகியவை அவரை வீட்டுக்கு வீடு அறிமுகமான நடிகராக மாற்றின.
கடைசி வரை போராட்டம்
சித்தார்த்தின் உடல்நிலைக்காக பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். குறிப்பாக நடிகை சீமா ஜி நாயர் தொடர்ந்து அவருக்கு துணையாக இருந்து சிகிச்சை செலவுகளையும் கவனித்து வந்தார். ஆனாலும் சித்தார்த் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது. இது அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் ரசிகர்களையும், நண்பர்களையும் வருத்தம் அடைய செய்தது.
அவரது மறைவுக்குப் பிறகு, சீமா சமூக வலைதளத்தில் எழுதிய உருக்கமான பதிவு பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. "உனக்காக எவ்வளவு போராடினேன்... ஆனாலும் கடவுள் உன்னை வலியின்றி அழைத்துக் கொண்டார்" என்ற வரிகள் ரசிகர்களை நெகிழ வைத்தது.
அமைதியான வாழ்க்கை
சித்தார்த்தின் குடும்பத்தில் தாயாரும், தம்பியும் உள்ளனர். குடும்பத்தை மிகவும் நேசித்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் வெளிப்படுத்தாமல் அமைதியாக வைத்திருந்தவர் என்று நண்பர்கள் கூறுகின்றனர். சித்தார்த்தின் மறைவுக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "இன்னொரு திறமையான கலைஞரை இழந்துவிட்டோம்" என்ற வருத்தம் பலரிடமும் வெளிப்படுகிறது.

ரசிகர்களின் ரியாக்ஷன்
சித்தார்த் நடித்த கதாபாத்திரங்கள் பல குடும்பங்களில் இன்னும் பேசப்படும் நிலையில், அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. "சீரியலில் பார்த்த மாதிரி சிரித்த முகம் இப்போ இல்லையே" என்று பலர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
சின்னத்திரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சித்தார்த் வேணுகோபால், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர். வாழ்க்கை முழுவதும் போராடிய அவர், இறுதியில் அமைதியான உலகிற்கு சென்றாலும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் மறையாது.
"ஒரு நல்ல மனிதரும், ஒரு இயல்பான நடிகரும்... சித்தார்த் என்றும் ரசிகர்களின் நினைவில் வாழ்வார்." என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications