காவிரி: வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கண்டன கடிதம்
சென்னை:
தமிழகத்துக்கு எதிராக எந்தவிதமான முடிவும் எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆட்சேபத்துடன் நாளை நடக்கும் காவிரிகண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்கிறோம் என பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
வறட்சிக் காலங்களில் நதி நீரை மாநில அரசுகள் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதிக்க காவிரி கண்காணிப்பு ஆணையத்தை மத்தியஅரசு கூட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி ஆணையத்தையும் கூட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு தடை பெறவும் கர்நாடகம்முயல்கிறது.
இந் நிலையில் கண்காணிக்குபுப் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் விரும்பவில்லை. ஆனால், தமிழகம் கலந்து கொள்ளாவிட்டால்கர்நாடகத்துக்கு ஆதரவாக ஏதாவது முடிவு எடுக்கப்பட்டு விடலாம் என்பதால் அதில் கலந்து கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:
உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு உத்தரவிட்ட பின்னரும் அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம் என்றுதேவையில்லாமல் ஒரு நாள் முழுவதும் இழுத்தடித்தார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா. இதனால், 3ம் தேதி முழுவதும் ஒரு சொட்டு நீரைக்கூட கர்நாடகம் விடவில்லை.
4ம் தேதி தான் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். இந்த நீர் தஞ்சை விவசாயிகளுக்கு போய்ச் சேர 10 நாட்கள் ஆகும். இனிமேல் தான் இந்தத்தண்ணீர் மேட்டூருக்கே வந்து சேர வேண்டும்.
இதுவரை ஒரு சொட்டு நீரைக் கூட தமிழகம் இன்னும் பெறாத நிலையில் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு கர்நாடக முதல்வர்அவசரப்படுத்துகிறார். நீங்களும் அவரது கோரிக்கையை ஏற்று கூட்டத்தை கூட்டியிருக்கிறீர்கள்.
இதில் கலந்து கொள்ள எங்களுக்கு 48 மணி நேர அவகாசம் மட்டும் தந்து கூட்டத்தை கூட்டியுள்ளீர்கள்.
உங்கள் இருவரது செயல்களுமே தமிழகத்துக்கு பலவிதமான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாகத்திரும்பிவிட்டதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று நீர் விட மறுத்தார் கிருஷ்ணா. நீங்களும் அவரை வற்புறுத்தாமல்இருந்தீர்கள். இந் நிலையில் உச்ச நீதிமன்றத் தலையீட்டினால் எங்களுக்கு நியாயம் கிடைத்தது.
இந் நிலையில் கண்காணிப்புக் குழுவை அவசரமாக நாளையே கூட்ட வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கூட்டத்தில் நீங்கள்தமிழகத்துக்கு எதிரான முடிவு எடுக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
எங்களுக்கும் நாளை முக்கிய வேலை இருக்கிறது. பல முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கவேண்டியுள்ளது. அதில் எங்கள் தலைமைச் செயலாளரும் இருந்தாக வேண்டும்.
ஆனால், எங்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளாவிட்டால் தமிழகத்துக்கு எதிரான முடிவை மத்திய அரசு எடுத்துவிட வாய்ப்புஇருப்பதால் நாளைய கூட்டத்தில் எங்கள் தலைமைச் செயலாளர் கலந்து கொள்வார்.
இந்தக் கூட்டத்தில் நாங்கள் விருப்பத்துடன் பங்கேற்கவில்லை. ஆட்சேபத்துடன் தான் தலைமைச் செயலாளாரை அனுப்பி வைக்கிறோம்.நீங்களும் கர்நாடக முதல்வரும் சேர்ந்து தமிழகத்தின் நலனுக்கு எதிராக முடிவெடுத்துவிடக் கூடிய அபாயம் இருப்பதால் தான் நாங்கள்இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறோம்.
இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார் ஜெயலிதா.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications