சென்னையை பரபரப்பாக்கிய மன நலம் பாதித்த பெண்கள்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உடலில் உடையில்லாமல்ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னொரு பெண் தண்டவாளத்தில் நின்று ரயிலை நிறுத்த முயற்சித்தார்.
கெளஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல காலையில் சென்னை வந்தது.
அந்த ரயிலிலிருந்து 25 வயது கொண்ட இளம் பெண் ஒருவர் இறங்கினார். ரயிலில் அவர் டி.டி.ஆருடன் தகராறுசெய்து கொண்டே வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ரயிலிலிருந்து இறங்கிய அவர், பிளாட்பாரத்தில் தாறுமாறாக நடக்கத் தொடங்கினார். பின்னர் தனது உடைகளைஒவ்வொன்றாக கழற்றிப் போட்டார். பிரா மற்றும் ஜட்டியுடன் அங்கும் இங்குமாக ஓடினார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல்கொடுத்தனர். பெண் போலீஸார் விரைந்து வந்து அந்தப்பெண்ணைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் பிடிபடவில்லை.
கடைசியில் ஒரு கழிப்பறைக்குள் அந்தப் பெண் நுழையவே அங்கு புகுந்து அவரை மடக்கிப் பிடித்தனர் பெண்போலீஸார்.
விசாரணையில் இதே பெண் ஏற்கனவே ஒரு முறை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இப்படி ஓடி பரபரப்பைஏற்படுத்தியவர் என்பது தெரியவந்தது.
தண்டவாளத்தில் ஒரு "திடுக்":
இந் நிலையில் தண்டவாளத்தின் நடுவில் நின்று ரயிலை நிறுத்தினார் ஒரு பெண். ரயில் டிரைவரின் சமயோஜிதத்தால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கடம்பத்தூர் என்ற இடத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, தண்வாளத்தின் நடுவில் ஒரு பெண் நின்று கையை ஆட்டி ரயிலை நிறுத்துமாறு கோரினார்.
திடீரென்று தண்டவாளத்தில் பெண்ணைப் பார்த்துத் திடுக்கிட்ட ரயில் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். ஹாரன் அடித்துக் கொண்டே வந்தார். ஆனால் அந்தப் பெண்நகரவில்லை. இதையடுத்து அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
அவருக்கு மிக அருகே வந்து ரயில் நின்றது. இதனால் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
அந்தப் பெண் பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அவருக்கு மன நிலை சரியில்லை என்று தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications