பழைய வழக்கில் வைகோவுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
1983ம் ஆண்டு நடந்த திமுக, அதிமுக மோதல் தொடர்பான வழக்கில் வரும் 17ம் தேதி மயிலாடுதுறை கோர்ட்டில்ஆஜராகுமாறு வைகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா வழக்கில் கைதாகி இப்போது வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.
கடந்த 1983ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடந்த தேர்தலின்போது, திமுக மற்றும் அதிமுகதொண்டர்களுக்கிடையே மோதல் நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, வைகோஉள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இத்தனை வருடங்களாக தூங்கிக் கிடந்த அந்த வழக்கு தற்போது தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்குவந்துள்ளது. மயிலாடுதுறை குற்றவியல் கோர்ட்டில் வரும் 17ம் தேதி வைகோ உள்ளிட்டவர்கள் ஆஜர்படுத்தப்படவேண்டும் என்று நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் சிறையில் இருக்கும் வைகோ மயிலாடுதுறை கோர்ட்டுக்கு 17ம் தேதி கொண்டுசெல்லப்படுவார்.
வைகோ- கண்ணப்பன் சந்திப்பு:
இதற்கிடையே வைகோவை மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் கண்ணப்பன் சிறையில் சந்தித்துப்பேசினார்.
வைகோவின் சிறை வாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்தியஅமைச்சர் கண்ணப்பன் வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்துப் பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications