செப்-11: அமெரிக்கா வான்வெளியில் போர் விமானங்கள் கண்காணிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி ஓராண்டு முடிவடைவதையொட்டி மீண்டும் அதே போன்ற தாக்குதல்நடக்கலாம் என்ற தகவல் வந்துள்ளது.
இதையடுத்து நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகர்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்று முதல் இந்தக் கண்காணிப்புப் பணி தொடங்கிவிட்டாக பென்டகன் தெரிவித்துள்ளது. அனுமதி இல்லாமல் அமெரிக்க வான்வெளியில் பறக்கும் எந்த விமானத்தையும் சுட்டுத் தள்ள இந்த போர் விமானங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தாக்குதல் நடந்தவுடன் இந்த போர் விமானக் கண்காணிப்பு தொடர்ந்து அமலில் இருந்து வந்தது. கடந்த ஏப்ரலில் தான் இந்தகண்காணிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், இடையிடேயே திடீரென போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.
இந் நிலையில் செப்டம்பர் 11ம் தேதி மீண்டும் நெருங்கும் நிலையில் பின் லேடன் கும்பலின் தாக்குதல்கள் மீண்டும் நடக்கலாம் என்றுதெரிகிறது.
ஆப்கான் அதிபர் மீது துப்பாக்குச் சூடு:
இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரை துப்பாகியால் சுட்ட அல்-கொய்தா தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான். அதே தினம் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் இறந்தனர்.
நேற்றும் காபூலில் இன்னொரு குண்டு வெடித்தது. இதிலும் 25 பேர் பலியாயினர்.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீதும் நடக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ரகசியமாய் அமெரிக்கா சென்ற முஷாரப்:
இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குல் அச்சம் காரணமாக சில வாரங்களாக வீட்டை விட்ட வெளியே வராமல் இருந்து வரும் பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று மிக பல்ல பாதுகாப்புடன், ரகசியமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
ஐ.நா. சபையில் நடக்கும் தீவிரவாதம் குறித்த மாநாட்டில் பங்கேற்க அவர் அமெரிக்கா சென்றார்.
ஆனால், அவரது உயிருக்கு தீவிரவாதிகளும் ராணுவத்தின் ஒரு பிரிவினரும் குறி வைத்திருப்பதால் கடந்த சில வாரங்களாகவே வீட்டைவிட்டே அவர் வெளியே வரவில்லை. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தனது அதிபர் மாளிகையிலேயே தேசியக் கொடியை ஏற்றினார்.
மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இன்று மிக பலத்த பாதுகாப்புடன் அவர் அதிபர் மாளிகையைவிட்டு வெளியே வந்தார். மாலை 3.45 மணிக்கு லாகூர் விமானநிலையத்துக்கு வருவதாக இருந்த அவர் முன்னதாக காலை பகல் 1.15 மணிக்கே விமான நிலையம் வந்துவிட்டார்.
இதன் மூலம் தனது ராணுவத்தினரைக் கூட நம்ப முடியாத நிலைக்கு முஷாரப் தள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது.
அவர் விமான நிலையம் செல்லும் பாதை முழுவதும் போக்குவரத்து பல மணி நேரத்துக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்டஊரடங்கு உத்தரவு போன்ற நிலைமை இருந்ததாக டான் பத்திரிக்கை நிருபர் தெரிவித்தார்.
வரும் 9 தேதி இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் அமெரிக்கா புறப்படுகிறார்.
இந் நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஒரு அல்-கொய்தா தீவிரவாதியை ஜெர்மன் போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து ஆர்.டி.எக்ஸ்வெடி மருந்துகளை கைப்பற்றியுள்ளனர். இவன் ஜெர்மனியில் உள்ள அமெரிக்க அலுவலகங்கள் மீது வரும் 11ம் தேதி தாக்குதல் நடத்தத்திட்டமிட்டிருந்தான்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications