கன்னடர் கலாட்டா: தமிழகத்துக்கு இதுவரை 60 லட்சம் நஷ்டம்
ஒசூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றது, காவிரி விவகாரம் ஆகிய நிகழ்வுகளால்தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இதுவரை ரூ. 28 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
தமிழக பூ வியாபாரிகளுக்கு ரூ. 30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு செல்லும் பேருந்துப் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. ஒசூரிலிருந்து, மைசூருக்கு தினசரி 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த 14 நாட்களாக இவை இயக்கப்படவில்லை. இதனால் இங்கு மட்டும் ரூ. 20 லட்சம் அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளது. மற்ற ஊர்களிலிருந்து கர்நாடகத்தின் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நஷ்ட விவரம் தெரியவில்லை.
நாகப்பா கடத்தப்பட்டதால் தமிழக அரசுக்குச் சொந்தமான ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது.மேலும் பல பஸ்கள் உடைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட சேதம் 2 லட்சத்தைத் தாண்டும் என்று தெரிகிறது.
தமிழக போக்குவரத்துத் துறை தவிர இந்த விவகாரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பூ வியாபாரிகளும், அதைவிளைவிக்கும் விவசாயிகளும்தான். விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை ரூ. 30 லட்சம் அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாமந்திப் பூ, ரோஜாப் பூ, கனகாம்பரம், மல்லி ஆகிய பூக்களை பெங்களூக்கு கொண்டு செல்ல முடியாமல் பூவியாபாரிகள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
மொத்தத்தில் தமிழக அரசும் கடந்த 2 வாரங்களில் சுமார் ரூ. 60 லட்சத்தை இழந்து நிற்கின்றன.
-->
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications