வாஜ்பாயின் தீர்ப்பு: ஜெயலலிதா நிராகரிப்பு
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டோம். மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி நியாயம்பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு தினசரி 0.8 டிஎம்.எசி தண்ணீர்விடுமாறு கர்நாடகத்திற்கு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான நதி நீர்ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை தமிழகம் நிராகரித்து விட்டது. சுப்ரீம் கோர்ட் கூறியபடி தினசரி 1.25டிஎம்சி தண்ணீர் விட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நிதி நீர் ஆணையத்தின் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சிகரமாகஉள்ளது. நடுநலையுடன் செயல்பட வேண்டிய பிரதமர், கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது வருத்தம்தருவதாக உள்ளது.
ஆணையத்தின் தீர்ப்பு ஏற்புக்குரியதல்ல. இதை எதிர்த்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். தினசரி 1.25டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் தான் சம்பா சாகுபடியைத் தொடங்க முடியும்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப்படி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகத்திற்கு, கர்நாடகம் 60 டி.எம்.சிதண்ணீரை வழங்க வேண்டும். அப்படிப் பார்த்தால் அடுத்த 50 நாட்களில் தினசரி 1.50 டிஎம்சி தண்ணீரைகர்நாடகம் விட்டாக வேண்டும்.
ஆனால் வெறும் 0.8 டி.எம்.சி. நீரை மட்டும் திறந்து விடுமாறு கர்நாடகத்திடம் மத்திய அரசு கூறியுள்ளதுதமிழகத்துக்கு விரோதமான செயல். ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை.
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வற்புறுத்தலுக்கு பிரதமர் வாஜ்பாய் பணிந்து விட்டார். ஏற்கனவேதயாரித்து வைத்திருந்த உரையை எடுத்துப் படித்துத் தனது முடிவை அவர் கூறியதிலிருந்து, திட்டமிட்டமுடிவுடன்தான் அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார் என்பது தெளிவாகியுள்ளது.
தமிழகத்தின் நிலையை அவர் காதில் வாங்கவே இல்லை என்பதும் அவரது இந்த ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தீர்ப்புதெளிவாக்கிவிட்டது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications