ஒரு வழியாக மேட்டூர் வந்தது காவிரி நீர்
சேலம்:
கடந்த இரு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் ஒரு வழியாக மேட்டூர் வந்து சேர்ந்தது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி கடந்த 4ம் தேதி கபினி அணைையிலிருந்து 1.25 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டதாககர்நாடகம்தெரிவித்திருந்தது.
ஆனால், தண்ணீர் வரும் வழியில் உள்ள கால்வாய்களில் கர்நாடக விவசாயிகள் மணல் மூட்டைகளைப் போட்டுமூடியதாலும், கபினி அணையின் மதகுகளை அதிகாரிகள் அவ்வப்போது மூடிவிட்டதாலும் தண்ணீர் தமிழகத்துக்குவந்து சேரவில்லை.
இந் நிலையில நேற்று முன் தினம் அணையை விவசாயிகளே மூடினர். 15 மணி நேரத்துக்குப் பின் நேற்று தான்அணை மீண்டும் திறக்கப்பட்டது.
இவ்வாறு கர்நாடகத்தில் இருந்து இழுத்துக்கோ பறிச்சிகோ ஸ்டைலில் கிளம்பிய காவிரி நீர் தட்டுத் தடுமாறி.தடைகளைத் தாண்டி நேற்று ஓகனேக்கல் வந்து சேர்ந்தது.
இந்த நீர் நேற்று இரவு 8 மணி வாக்கில் மேட்டூர் அணைக்கு வந்துது. இதை தமிழக பொதுப்பணித்துறைஅதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேட்டூர் அணையில் திங்கள்கிழமை காலை 4.30 மணி நிலவரப்படி 64.25 அடி தண்ணீர் இருந்தது. அணைக்குவிநாடிக்கு 4130 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 14,941 கன அடி நீர் வெளியேறிக்கொண்டுள்ளது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கர்நாடத்தில் இருந்து 1.25 டி.எம்.சிக்குப் பதிலாக 0.8 டி.எம்.சி. நீர் தான்தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டு வருகிறது.
முதலில் 1.25 டி.எம்.சி நீரைத் தரச் சொல்லி உத்தரவு வந்தபோது 24 மணி கழித்து அதை செயலில் காட்டியகர்நாடக அரசு, நீரை குறைவாக விடச் சொன்ன பிரதமர் வாஜ்பாயின் உத்தரவை உடனுக்குடன் அமலாக்கிவிட்டது.
தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரை உடனே குறைக்குமாறு டெல்லியில இருந்த முத்லவர் கிருஷ்ணா நேற்று இரவே அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்துவிட்டார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications