காஷ்மீர்: தீவிரவாதிகள் சுட்டு அமைச்சர் உள்பட 16 பேர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் வரும் 16ம் தேதி முதல்கட்டத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் இன்று தீவிரவாதிகள் நடத்தியகொலைவெறித் தாக்குதலில் அம்மாநில அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் சட்டத்துறை அமைச்சர் முஷ்டக் அகமது லோன் கூப்வாரா மாவட்டத்தில் உள்ள ரெட்நாக் கிராமத்தில்இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது தீவிரவாதிகள் கடுமையானதாக்குதல் நடத்தினர்.
முதலில் அவருடைய காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தைக் கண்ணிவெடி வைத்துத்தகர்த்த தீவிரவாதிகள், பின்னர் அவர் வந்த காரின் மீது சராமாரியாகத் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.
இச்சம்பவத்தில் லோனுடன் வந்து கொண்டிருந்த ஆறு பேர் வரை கொல்லப்பட்டனர்.
சமீபத்தில் தான் புதிதாக முளைத்துள்ள அல்-அரிபெல் என்ற தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப்பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையே சூரன்கோட் என்ற இடத்தில் உள்ள பஸ் நிலையத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு நின்றுகொண்டிருந்த மக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டதில் ஐந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு சிறுவன்உள்பட ஒன்பது பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் பேரனைத் தீவிரவாதிகள்நேற்று இரவு கடத்திச் சென்று விட்டனர். மேலும் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அம்மாநில சுற்றுலாத்துறைஇணை அமைச்சர் வீட்டிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீரில் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தீவிரவாதிகளின் அடுத்தடுத்த இந்தத் தாக்குதல்களால் அம்மாநிலமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications