ஸ்ரீபெரும்புதூர்: அடகுக் கடைக்காரர் வீட்டில் துணிகர கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அடகுக் கடைக்காரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 20பவுன் நகை மற்றும் பல லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அடகுக் கடை நடத்தி வந்தார். அடகு பிடிக்கும் நகைகளைவீட்டில் வைத்திருப்பது வழக்கம்.
இந்த நலையில் நேற்று அதிகாலை சில கொள்ளையர்கள் லோகநாதன் வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிலிருந்தலோகநாதன், அவரது மனைவி, உறவினர் கேசவன் நாயர் ஆகியோரை கத்தி முனையில் அவர்கள் மிரட்டினர்.
பின்னர் வீட்டிலிருந்த 20 பவுன் நகை, பல லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு கிளம்பினர்.
அதைக் கேசவன் நாயர் தடுத்தபோது அவரை கொள்ளையர்கள் கத்தியால் குத்தினர். இதில் அவர் லேசான காயம்அடைந்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications