தஞ்சையில் வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
காவிரிப் பாசன விவசாயிகளுக்கு பிரதமர் வாஜ்பாயும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி தஞ்சாவூரில் விவசாயிகள் அவர்களுடைய உருவ பொம்மைகளை எரித்துப் போராட்டம்நடத்தினர்.
தமிழ் தேச பொதுவுடமைக் கட்சித் தலைவர் பழனி மாணிக்கம் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா ஆகியோரின் உருவ பொம்மைகளை விவசாயிகள்எரித்தனர்.
இதே காரணத்திற்காக தஞ்சாவூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், தளவாய் சுந்தரம், நைனார் நாகேந்திரன் மற்றும் ஜீவானந்தம்உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications