காவிரி விவகாரம்: ஜெ. மீது ராமதாஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நிலை சரியில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சிநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்க பயணம் எங்களுக்கு முக்கியமில்லை. போவதற்கு முன் காவிரி ஆணையக்கூட்டத்தை கூட்டி விட்டுப் போங்கள் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தொடர்ந்து வற்புறுத்தியதால்அவர்களுக்கு சாதகமாக காவிரி ஆணையக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
ஆனால் நமது முதல்வரோ இதில் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னிச்சையாக செயல்படுகிறார்.அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையை அவர் இது வரை கேட்கவே இல்லை.
மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் என ஒவ்வொருவராக பதவி நீக்கம் செய்யப்பட்டு வருவதுநல்லதல்ல என்றார் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications