தாமரைக்கனிக்கு முன் ஜாமீன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனிக்கு சென்னைஉயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாகதாமரைக்கனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகினார் தாமரைக்கனி. ஆனால் அதுநிராகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் தாமரைக்கனி.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், தாமரைக்கனிக்கு நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கினார்.
போலீஸ் விசாரணைக்குத் தேவைப்படும் போதெல்லாம் அதற்கு தாமரைக்கனி ஒத்துழைக்க வேண்டும். ரூ.5,000ரொக்க ஜாமீன் மற்றும் அதற்கு ஈடான இரு நபர் ஜாமீனில் தாமரைக்கனி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றுநீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications