செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
அடுத்த 50 நாட்களில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் மதானி ஆகியோர் விடுதலைசெய்யப்படாவிட்டால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஸ்டேஷன்மாஸ்டருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது..
இதுதொடர்பாக வந்துள்ள கடிதத்தில்,
இன்னும் 50 நாட்களுக்குள் நெடுமாறனும், மதானியும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் செங்கல்பட்டுஉள்ளிட்ட பல ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
சமீப காலத்தில் செங்கல்பட்டு நிலையத்திற்கு வந்துள்ள இரண்டாவது மிரட்டல் கடிதமாகும் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications