அதிரடிப்படை உதவவில்லை: கருப்பு பூனைப் படை திடீர் வாபஸ்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் எந்தவிதத்திலும் தங்களுக்கு உதவி செய்யவில்லைஎன்று கூறி மத்திய அரசின் கருப்புப் பூனைப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் இன்று தங்கள் பணிகளைவாபஸ் பெற்றுக் கொண்டு டெல்லிக்குத் திரும்பிச் சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி இரவு வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டதைத்தொடர்ந்து, 150 கருப்புப் பூனைப் படையினர் வீரப்பனைப் பிடிப்பதற்காக காட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தேவையான உதவிகளையும் ஐடியாக்களையும் கூறுவார்கள் என்றும்அதன்படி நடந்து கொண்டு வீரப்பனைப் பிடிப்பதில் கருப்புப் பூனைப் படை கமாண்டோக்கள் ஈடுபடுவார்கள்என்றும் கூறப்பட்டது.
அதன்படி தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள குண்டால் காட்டுப் பகுதியில் 150 கமாண்டோக்களும்முகாமிட்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு இன்று திடீரென்று கருப்புப் பூனைப் படை கமாண்டோக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்களைத் திரும்பவும் டெல்லிக்கு வருமாறு அழைத்தது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தங்களுக்கு எந்தவிதத்திலும் உதவிசெய்யவில்லை என்று மத்திய அரசிடம் கருப்புப் பூனைப் படை கமாண்டோக்கள் கூறிவிட்டனர்.
மேலும் வெறுமனே இப்பகுதியில் நாங்கள் சும்மா உட்கார்ந்திருப்பது சுத்த வேஸ்ட் என்று கர்நாடக அரசிடமும்கமாண்டோக்களில் தலைவரான பிரிகேடியர் ராஜ் சீதாபதி கூறிவிட்டார்.
வீரப்பன் இருக்குமிடம் பற்றிய தகவல் கிடைத்த பின்னர் நாங்கள் மீண்டும் வந்து அவனைப் பிடிப்பதற்கானமுயற்சிகளில் ஈடுபடுவோம் என்றும் ராஜ் சீதாபதி கூறினார்.
இதையடுத்தே அவர்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. கமாண்டோக்கள் 150 பேரும் இன்றேடெல்லிக்குத் திரும்புகின்றனர்.
இருந்தாலும் 20 கமாண்டோக்கள் மட்டும் தொடர்ந்து குண்டால் பகுதியிலேயே தங்கியிருப்பார்கள் என்றும்கூறப்படுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications