தனிமைப்படுத்தப்படும் திமுக!
காவிரிப் பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் புறக்கணித்து, பிரதமரைச் சந்திக்கச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும்இடம்பெறாமல், பல்வேறு தரப்பினரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது திக.
இதையடுத்து அரசியல்வாதிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலைக்கும் அந்தக் கட்சி தள்ளப்பட்டு விட்டது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆரம்பம் முதலே ஒத்துழைப்பு தராமல் அரசையும், தமிழக முதல்வர்ஜெயலலிதாவையும் பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வந்தன. திமுகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.
இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். இதில், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் உள்பட அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர், திமுகவைத் தவிர.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர நாங்கள் என்ன அடிமைகளா என்ற ஈகோ பிரச்சினையால் இக்கூட்டத்தைப் புறக்கணித்தது திமுக. விவசாயிகள் பிரச்சினையைஅவர்கள் மறந்து விட்டனர். கெளரவம் தான் முக்கியம் என்ற எண்ணம் திமுகவிடம் மேலோங்கி இருந்ததை அனைத்துக் கட்சியினருமே கண்டித்தனர்.
இந்நிலையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும் பங்கேற்காமல் அதையும் திமுகவினர் புறக்கணித்தனர். இதன் மூலம் அனைத்துக் கட்சியினரின்கடுமையான கண்டனத்தையும் வாரிக் கொட்டிக் கொண்டுள்ளது திமுக.
ஜெயலலிதா தலைமையிலான குழுவில் தான் இடம் பெற மனமில்லை. தானாகவே டெல்லி சென்று காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுக ஏதாவதுசெய்திருக்கலாமே, பிரதமரை வற்புறுத்தியிருக்கலாமே, துரைருகனையோ அல்லது அன்பழகனையோ டெல்லிக்கு அனுப்பி மனு கொடுத்திருக்கலாமேஎன்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அனைத்துக் கட்சிக் குழுவில் கலந்து கொள்ளாதவர்கள் தமிழர்களே இல்லை என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கடுமையாகசாடியுள்ளார்.
தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இந்தப் பிரச்சினையில் ஒரே அணியில் நிற்க வேண்டும். அப்படி நிற்காத திமுகவின் நிலை துரதிர்ஷ்டவசமானது என்றுபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஜெயலலிதாவை கடுமையாக சாடியுள்ளன. விமர்சனம் செய்துள்ளன. ஆனால் அனைத்துக்கட்சிக் கூட்டம் மற்றும் டெல்லிக்கு சென்ற குழுவில் அத்தனை எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன.
இதன் மூலம் மக்களின் பிரச்சினையில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று அவை வெளிக்காட்டியுள்ளன. ஆனால் சுய கெளரவம் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டங்களை, குழுக்களில் பங்கேற்பதை திமுக தவிர்த்துள்ளது. இதன் மூலம் அரசியல் அரங்கில் திமுக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவேகூறப்படுகிறது.
மக்களின் பிரச்சினைகளை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரைகளைக் கூறி அதை வழி நடத்திச்செல்வதே எதிர்க்கட்சியின் உண்மையான கடமை. அப்படிப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுகவும், எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும் செயல்படதிமுக தலைவர் கருணாநதி ஒத்துழைப்பு தர வேண்டும்.
இல்லாவிட்டால் தஞ்சை பாசனப்பகுதி விவசாயிகள் மத்தியிலும், மக்களிடமிருந்தும் கூட திமுக தனிமைப்படுத்தப்பட்டு விடும் ஆபத்து உள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications