ஆந்திர கொள்ளையர்கள் பிடியில் 48 தமிழக மீனவர்கள்
சென்னை:
சென்னை காசிமேட்டிலிருந்து 17 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 48 மீனவர்களை ஆந்திர கடல் கொள்ளையர்கள்பிடித்துச் சென்று விட்டனர்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 48 மீனவர்கள், 17 படகுகளில் நெல்லூர் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை ஆந்திர கடல் கொள்ளையர்கள் வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர்கள் அனைவரும்நெல்லூரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு படகுக்கு ரூ.10,000 வீதம் தந்தால் தான் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்போம் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
இதுகுறித்து மீனவர்கள் அரசுக்குப் புகார் அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஏழு பேர் கொண்ட அரசுஅதிகாரிகள் குழு நெல்லூர் விரைந்துள்ளது. அங்கு ஆந்திர மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்திமீனவர்களை மீட்கும் முயற்சியில் அந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அடிக்கடி ஆந்திரக் கொள்ளையர்களால் சென்னை மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு வருவதால் இப்பிரச்சினைகுறித்து ஆந்திர அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications