பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: வள்ளலார் தரும சாலையில் அரசு அன்னதான திட்டம் ரத்து
கடலூர்:
வடலூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞான தரும சாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின்அன்னதானத் திட்டம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைதியைப் போதித்த வடலூர் அருட்திரு வள்ளலார் தொடங்கிய அன்னதான சத்திரமான சத்திய ஞான தருமசாலையில் முதல்வரின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் உலகுக்கே அன்னதானத்தைப் போதித்த வள்ளலார் ஆரம்பித்த தரும ஞான சபையில் முதல்வரின்அன்னதானத் திட்டத்தை சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உடனடியாக இந்த திட்டத்தை வாபஸ் பெறக் கோரி நாளை (திங்கள்கிழமை) வடலூரில் கடையடைப்பு நடத்தவும்பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் தலையீட்டின் பேரில் வடலூர் தரும ஞானசபையில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத்திட்டம் இன்ற ரத்து செய்யப்பட்டது.
அதற்குப் பதிலாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானத் திட்டம்செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து திங்கள்கிழமை நடத்தப்படுவதாக இருந்த கடையடைப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
தரும ஞான சபையில் கடந்த 135 ஆண்டுகளாக யாரிடம் காசு வாங்காமல் மூன்று வேளையும்நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications