இம்ரானை அழைத்து செல்ல மும்பை போலீசார் சென்னை வருகை
சென்னை:
சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்த இம்ரான் மெகந்தியைஅழைத்துச் செல்வதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மும்பை போலீஸார் இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல்செய்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட இம்ரானை 5 நாட்கள் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் கடந்தசனிக்கிழமை உத்தரவிட்டது.
ஆனால் இன்று காலை இம்ரான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அவனை வரும்அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் தனக்கு சிறுநீரக நோய் இருப்பதால் தன்னைப் போலீஸ் காவலிலேயே வைக்க வேண்டும் என்று இம்ரான்கோரிக்கை விடுத்தான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள நீதிபதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் இம்ரானைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக வாரண்ட்டுடன் மும்பை போலீஸார் சென்னைவந்து சேர்ந்தனர்.
இன்று காலை சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரை மும்பை போலீசார் சந்தித்துப் பேசினர்.பின்னர் எழும்பூர் நீதிமன்றம் சென்ற மும்பை போலீசார், இம்ரானைக் கைது செய்வதற்கான வாரண்ட்டைசமர்ப்பித்து, அவனை அழைத்துச் செல்வதற்காக ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் இம்ரானை மும்பை போலீசார் அழைத்துச் செல்வார்கள்.
இம்ரான் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications