தீப்பெட்டி தொழிற்சாலை தீவிபத்து: சாவு எண்ணிக்கை 8 ஆனது- முதல்வர் நிதியுதவி
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஏற்பட்ட தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்தில் இறந்தவர்களின்எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீண்டான்பட்டி என்ற இடத்தில் உள்ள தனியார் தீப்பெட்டித் தயாரிப்புத்தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் மூக்கம்மாள், கருப்பாயி, ரூபி, மாரி, மாரியம்மாள் ஆகியோர் இறந்தனர். காயமடைந்த 40க்கும்மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் மேலும் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தனர். இவர்களையும் சேர்த்து இறந்தவர்களின்எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை தீப்பெட்டித் தொழிற்சாலை தந்தால் தான் பிணங்களைவாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களுக்கும், தீப்பெட்டி நிறுவனத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்ட பின்னர் இறந்த பெண்களின்உடல்களை அவர்களது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
இதற்கிடையே, விபத்தில் இறந்த பெண்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2.5 லட்சம் நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.
பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு நிதி:
இதற்கிடையே இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 உதவித் தொகையும், பலத்த காயமடைந்தவர்களுக்குதலா ரூ.15,000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவில்பட்டி சென்று தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications