கீரிப்பட்டி, பாப்பாபட்டியில் வேட்பாளர்கள் வாபஸ்: தேர்தல் இல்லை
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்த 4வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 7ம் தேதிஅங்கு தேர்தல் நடைபெறாது.
கீரிப்பட்டியில் மாயிக்காளை மற்றும் கட்டராமன் என்ற சகோதரர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் இவர்கள் இருவருமே சமீபத்தில் தங்களுடைய வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் பாப்பாபட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த இரண்டு பேரும் கூட தங்களுடையமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
சடையன் மற்றும் சின்னன் ஆகிய இரு சகோதரர்களும் தான் பாப்பாபட்டியில் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்திருந்தனர். நேற்று இவர்கள் இருவருமே தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே வரும் அக்டோபர் 7ம் தேதிதேர்தல் நடைபெறாது. இதே மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலத்தில் யாருமே வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை என்பதால் அங்கும் தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த மூன்று தொகுதிகளிலுமே அவர்களை வேட்பு மனுத் தாக்கல்செய்யவிடாமலும் போட்டியிட விடாமலும் மேல் ஜாதியினர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
நாட்டார்மங்கலத்தில் தொடர்ந்து 8வது முறையாக யாரும் மனுத் தாக்கல் செய்ய முன் வராததால் அங்கு பலஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கீரிப்பட்டி மற்றும் பாப்பாபட்டியிலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டபஞ்சாயத்துத் தலைவர்கள் ஒருசில நாட்களிலேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications