வீரப்பனைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை: கிருஷ்ணா மீது ஜெ. புகார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்குத் கர்நாடக அரசு துளிக் கூட ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றுதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் நிருபர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,
சமீபத்தில் டெல்லியில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் நானும் இது தொடர்பாகப் பேசினோம்.
ஆனால் டெல்லியிலிருந்து திரும்பி வந்து இவ்வளவு நாட்களாகியும் இது தொடர்பாக எந்தவிதமான தகவலையும்தமிழக அரசுக்கு கர்நாடக அரசு தெரிவிக்கவே இல்லை.
வீரப்பனைப் பிடிப்பதற்காக நாங்கள் எல்லா விதத்திலும் கர்நாடக அரசுக்கு ஒத்துழைப்பு தர தயாராகவேஉள்ளோம். ஆனால் இவ்விஷயத்தில் கர்நாடக அரசு தமிழகத்தை சிறிதும் மதிக்கவில்லை.
வீரப்பன் இன்னும் கர்நாடக காட்டுப் பகுதிகளில் தான் சுற்றி வருகிறான். அங்கிருந்து தப்பி தமிழகக் காட்டுப்பகுதிக்குள் அவன் வந்தால் நிச்சயம் பிடிபடுவான். அந்த அளவிற்கு கர்நாடக எல்லைப் பகுதிகள் முழுவதிலும்தமிழக அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி விவகாரம்:
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தைத் தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக அரசு மீது நாங்கள் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் இருப்பதால், காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வது நீதிமன்றத்தை அவமதிப்பதுபோன்றதாகும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
எனவே தான் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தோம். மேட்டூர்அணையையும் அவர்கள் வந்து பார்ப்பது சரியில்லை என்பதையும் தெரியப்படுத்தினோம்.
நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி கங்கை, காவிரி நதிகளை இணைத்தால் மட்டுமே காவிரிப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். எல்லாம் மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது என்றார் ஜெயலலிதா.
முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் இன்று நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, மேட்டூர்அணையை இன்னும் பார்வையிடாத நிலையில் காவிரி கண்காணிப்புக் குழுவின் பணி இன்னும் முடியவில்லைஎன்று கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications