திருச்சி-தஞ்சை இடையே 29ம் தேதி சிறப்பு நீராவி என்ஜின் ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்திய ரயில்வேயின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையே நீராவிஎன்ஜினில் இயங்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கஸ்தூரி ரங்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் ஞாயிற்றுக்கிழமை (29ம் தேதி) இந்த சிறப்பு ரயில் திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும் இடையே இயக்கப்படும்.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்றார்.
ஏற்கனவே நிலக்கரியால் இயங்கும் சிறப்பு ரயில் சமீபத்தில் சென்னையிலிருந்து அரக்கோணம் வரைஇயக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-->












Click it and Unblock the Notifications