சென்னையில் விஷ வாயு தாக்கி 2 சகோதரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருமங்கலத்தில் தூர் வாருவதற்காக கிணற்றில் இறங்கிய 2 சகோதரர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாகஇறந்தனர்.
திருமங்கலம் கைலாஷ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் இனறு தூர் வாருவதற்காக கிணற்றுக்குள் இறங்கிய சக்திவேல்என்பவரை விஷ வாயு தாக்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தன்னைக் காப்பாற்றக் கோரி அவர் குரல்எழுப்பினார்.
இதையடுத்து வெளியில் மேலே நின்று கொண்டிருந்த அவரது அண்ணன் அருண் உள்ளே இறங்கினார். அப்போதுஅவரும் விஷ வாயு தாக்குதலில் சிக்கினார்.
இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை கயிறு மூலம் வெளியே இழுக்க அப்பகுதியினர் முயற்சித்தனர். ஆனால், அதற்குள் இருவரும் உள்ளேயே இறந்து விட்டனர்.
கயிறு மூலம் இருவரின் உடல்களும் பின்னர் வெளியே கொண்டு வரப்பட்டன. அவர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications