மீண்டும் வருகிறது கூடல் நகர் எக்ஸ்பிரஸ்
மதுரை:
மதுரைக்கும், சென்னைக்கும் இடையிலான கூடல் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் மீண்டும்இயக்கப்படவுள்ளது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் முயற்சியால் இந்த ரயில் மீண்டும்கிடைத்துள்ளது.
இவர் படிக்காதவர் என்பதால் இவரை அமைச்சராக்கியபோது பல விதத்திலும் சந்தேகங்கள் எழுந்தன. இவரால்துறையை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால், மெத்தப் படித்து மத்திய அமைச்சர்களாக உள்ள நம் ஊரின் மற்ற 9 அமைச்சர்களைவிட மூர்த்தி கடந்த சிலமாதங்களிலேயே தமிழகத்துக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்துவிட்டதை பாராட்டியே ஆக வேண்டும்.
புதிய பல ரயில்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து வருகிறார். மூர்த்தி அமைச்சரான பின்னர் தமிழகத்துக்கு 6புதிய ரயில்கள் கிடைத்துவிட்டன.
ரயில்களில் தொட்டில்களை அமைத்து குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாயின் பிரச்சனையைத் தீர்த்துள்ளார்.இது மிகச் சிறிய ஒரு திட்டம் தான். ஆனால், இதன் பயன் எவ்வளவு என்பது கைக்குழந்தையுடன் செல்லும்குடும்பத்தினருக்கு மட்டும்தான் புரியும்.
அது போல முன்பு ஓடிக் கொண்டிருந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை சில வட இந்திய அதிகாரிகள் திடீரென நிறுத்திவைத்திருந்தனர். இந்த ரயிலை இயக்கக் கோரி மதுரையில் போராட்டம் கூட நடந்தது. ஆனால், அதை ரயில்வேநிர்வாகம் காதில் வாங்காமல் இருந்து வந்தது.
இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் மதுரை சென்ற மூர்த்தியிடம் பயணிகள் நேரில் சந்தித்து இந்தப் பிரச்சனையைஎழுப்ப அங்கிருந்தபடியே மீண்டும் ரயிலை இயக்க உத்தரவிட்டார் மூர்த்தி.
இதையடுத்து அக்டோபர் 2ம் தேதி முதல் இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து காலை 8மணிக்கு இந்த ரயில்கிளம்பும். மாலை 4 மணிக்கு மதுரையை சென்றடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 12மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பும் ரயில், இரவு 8 மணிக்கு சென்னை வந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை கூடல்நகர் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் தமிழையே எழுத்துக் கூட்டி தட்டுத்தடுமாறித்தான் படிக்கிறார் மூர்த்தி. ஆங்கிலம் சுத்தமாகதெரியவில்லை. நிருபர்கள் சந்திப்பில் கூட கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது தடுமாறி தடுமாறியே பேசுகிறார்.
இருந்தாலும் அவரது நிர்வாகத் திறனையும் தமிழகத்துக்கு உரிய ரயில் திட்டங்களைக் கிடைக்கச் செய்யவும் அவர்காட்டும் ஆர்வத்தை மெச்சியே ஆக வேண்டும்.
-->
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications