இந்திய-அமெரிக்க கடற்படைகள் கூட்டாக பயிற்சி

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படை வீரர்கள் கேரளாவை ஒட்டியுள்ள அரபிக் கடலில் இன்ற கூட்டாகப் போர்ப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

கொச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் ஐ.என்.எஸ். டெல்லி மற்றும் ஐ.என்.எஸ். கோமதி ஆகிய போர்க் கப்பல்களும், அமெரிக்காவின்பால் எப். போஸ்டர் மற்றும் சேன்செலர்ஸ் வில்லே ஆகிய போர்க் கப்பல்களும் இந்தப் பயிற்சிக்காகப்பயன்படுத்தப்படுகின்றன.

இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,500 கடற்படை வீரர்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.

தங்கள் கடற்படையின் பலத்தை இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் இந்தப் பயிற்சியின் மூலம்சோதிக்கவுள்ளனர்.

வரும் அக்டோபர் 2ம் தேதி வரை இந்தப் பயிற்சி நீடிக்கவுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நான்காவது முறையாகஇந்த மலபார் போர்ப் பயிற்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+