கல்லால் அடித்து தான் இமாம் அலி கொலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலிஉண்மையில் கல்லால் அடித்து தான் கொல்லப்பட்டான் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

இமாம் அலியும் அவனுடைய கூட்டாளிகளும் தங்கியிருந்த வீட்டில் தமிழக மற்றும் பெங்களூர் போலீசார்அதிரடியாகச் சுற்றி வளைத்து வீட்டின் கதவைத் தட்டினர்.

உறக்கம் கலைந்து தீவிரவாதக் கும்பல் வெளியே நிற்பது போலீசார் தான் என்பதைத் தெரிந்து கொண்டதுமேதங்களிடமிருந்த துப்பாக்கியால் ஜன்னல் வழியாகப் போலீசாரை நோக்கிச் சுட ஆரம்பித்தது.

அந்தக் கும்பலில் இருந்த ஒரே பெண்ணான ஜாஸ்மின் தன் கையில் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் கொண்டுசர்வ சாதாரணமாகப் போலீசாரை நோக்கிச் சுட ஆரம்பித்தாள். அதன் பிறகே இமாம் அலி உள்ளிட்ட மற்றதீவிரவாதிகளும் கையில் கிடைத்த துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போலீசாரை நோக்கிச் சுட்டனர்.

இதையடுத்து வெளியே நின்று கொண்டிருந்த போலீசாரும் பதிலடித் தாக்குதல் நடத்திக் கொண்டே ஜன்னல்வழியாகக் கண்ணீர் புகைக் குண்டுகளை அந்த வீட்டுக்குள் போட்டனர்.

கண்ணீர் புகைக் குண்டுகள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கவே, கண்களைக் கசக்கிக் கொண்டே சிறிதுநேரம் தீவிரவாதிகள் சுடுவதை நிறுத்தினர். இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட போலீசார் அதிரடியாகஅனைத்து தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தினர்.

அந்த நிலையிலும் குண்டுக் காயங்களுடன் இமாம் அலி ஜன்னல் வழியாகக் குதித்து தப்பிக்க முயன்றான்.

இதைப் பார்த்த ஒரு போலீஸ் வீரர் தன்னிடமிருந்த துப்பாக்கி கீழே விழுந்த நிலையில் ஒரு பெரிய கல்லை எடுத்துஇமாம் அலியை நோக்கி எறிந்தார். அந்தக் கல்லும் குறி தப்பாமல் இமாம் அலியின் முகத்தைத் தாக்கியது.

இதனால் முகம் நசுங்கி ஜன்னலில் இருந்தவாறு வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்து இறந்தான் இமாம் அலி.

நேற்று அதிகாலை 2 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் காலை 4.30 மணி வரை நீடித்தது. அதன் பிறகே கதவைஉடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே புகுந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 தமிழகப் போலீசாருமே அதிரடிப்படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர்களை இந்த சிறப்புஆபரேஷனுக்காக தமிழக அரசு அனுப்பியிருந்தது.

இதற்கிடையே இந்தத் தாக்குதலில் காயமடைந்த அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் செல்லப்பாவுக்குசென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக சென்னையில் உள்ள பர்ஸ்ட் மெட்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செல்லப்பாவின் விரலில் சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாகவும், இப்போது அவர் நலமுடன்இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+