சீட்டு விளையாட்டில் தகராறு: ஒருவர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒரு வாலிபர் கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் அருகே உள்ளது கவுண்டம்பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் தன்நண்பர்களோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மூர்த்தி என்பவர் தன்னிடம் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து, அதை சம்சுதீன் மீது சரமாரியாககுத்தினார்.
இதில் படுகாயமடைந்த சம்சுதீன் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் அரசு மருத்துவமனைக்கும்கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சும்சுதீன் அங்கு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications