9ம் தேதி முதல் அரசு கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்
சென்னை:
வரும் 9ம் தேதி முதல் அரசுக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர்களும்,ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால் அரசுத் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால், இடையில் ஸ்டிரைக்கை கைவிட்டு விட்டுபணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் மீண்டும் வரும் 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதிக்கவுள்ளனர்.
இதையடுத்து மாணவர்களும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளனர். வரும் 3ம் தேதி கருப்பு பேட்ஜ்அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் அதன் பிறகு 4ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டமும் நடத்துகின்றனர்.
இறுதிக் கட்டமாக வரும் 9ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் மாணவர்கள் முடிவுசெய்துள்ளனர். மாநிலத்தில் உள்ள 67 அரசுக் கல்லூரிகளிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் பெருமன்றம் இந்தப் போராட்டங்களை நடத்தவுள்ளன.












Click it and Unblock the Notifications