மீண்டும் வருகிறது ஜெ.ஜெ. நகர்
சென்னை:
சென்னையின் புறநகரான முகப்பேர் பகுதிக்கு டாக்டர் ஜெ. ஜெயலலிதா நகர் என்று மீண்டும் பெயர் மாற்றம்செய்ய அம்பத்தூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முகப்பேர் பகுதியை இரண்டாகப் பிரித்து ஒருபகுதிக்கு (முகப்பேர் மேற்கு பகுதிக்கு) டாக்டர் ஜெ. ஜெயலலிதா நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் வந்த திமுக ஆட்சியில் மீண்டும் முகப்பேர் மேற்கு என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில் முகப்பேர் மேற்குப் பகுதிக்குஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
இந்தப் பகுதி அம்பத்தூர் நகராட்சியின் கீழ் வருகிறது. அம்பத்தூர் நகராட்சிக் கூட்டத்தில் ஜெயலலிதாவின்பெயரைச் சூட்டுவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைேவேற்றப்பட்டது.
இதையடுத்து முகப்பேர் மேற்கு என்ற பெயர் மீண்டும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா நகர் என்று மாறுகிறது.












Click it and Unblock the Notifications