இது காவிரி பிரச்சனை அல்ல... கன்னட இன வெறி போராட்டம்
சென்னை:
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடந்த தமிழ்த் திரையுலகின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு, அதேநேரத்தில் தமிழர் நலனை புறக்கணிக்கும் கன்னட நடிகர்களையும், கர்நாடகத் திரையுலகினரையும் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
வி.சி.குகநாதன்: காவிரிப் பிரச்சினைக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. சென்னையில் திரையுலகமே திரண்டு அடையாள உண்ணாவிரதம் அல்லதுபேரணி நடத்த வேண்டும். அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட கலைஞர்களை நடு ரோட்டில் வைத்தேசுட்டுக் கொள்ள வேண்டும்.
மணி வண்ணன்: நதிகளை தேசிய மயமாக்குவது குறித்து நிபுணர்களுடன் கலந்து பேசி அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் கலைஞர்கள்நடவடிக்கை எடுக்கலாம். ஏனென்றால் சினிமாக்காரன் கூறினால் அதை மக்கள் ஏற்பார்கள்.
காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
சரண்: கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்த் திரைப்படங்கள் எதையும் கர்நாடகத்திற்கு வினியோகிக்கக் கூடாது. தமிழ்ப் படங்களால்தான்அங்குள்ள தியேட்டர்கள் பிழைத்து வருகின்றன என்பதால் இந்த நடவடிக்கை அவர்களை பெரிதும் பாதிக்கும்.
நமது கலைஞர்கள் வாங்கியுள்ள தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திருப்பித் தந்து விடலாம்.
நதிகளை தேசியமயமாக்குவது தொடர்பாக விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சமூகவாதி எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோரிடம் ஆலோசனை பெற்றுஅதை மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளிடம் வலியுறுத்தலாம்.
வி.சேகர்: காவிரிப் பிரச்சினைக்காக மட்டும் கன்னடர்கள் நம்மை எதிர்க்கவில்லை. தமிழனுக்கு எதிராக போராடிக் கொண்டே இருக்க வேண்டும்என்று அங்குள்ள இன வெறியர்கள் அவர்களை வளர்த்து விடுகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்த வேண்டும், வன்முறையில் இறங்க வேண்டும் என்று அவர்களைத் தூண்டி விட அங்கு கன்னட அமைப்புகள்இருக்கின்றன. தெய்வப்புலவர் வள்ளுவரின் சிலையைத் திறக்க அவர்கள் காட்டும் தீவிர எதிர்ப்பிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக கர்நாடகத்தினர் நடத்தும் போராட்டம் கன்னட இன வெறிப் போராட்டம்தான் என்பதில்சந்தேகம் இல்லை.
சீமான்: பசித்தவனுக்குத்தான் பசியின் அருமை புரியும், தாகம் எடுத்தவனுக்குத்தான் தண்ணீரின் அருமை புரியும். தமிழகத்தின் சென்னை போன்ற நகரங்களில் ஏ.சிஅறைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவன் பிற மொழிக்காரன்தான்.
ரிக்ஷா ஓட்டுபவனும், பிச்சை எடுப்பவனும், வண்டி இழுப்பவனும்தான் உண்மையான தமிழன், அவன் தான் எனக்கு சொந்தக்காரன். முதலில் தமிழன்என்ற உணர்வு வர வேண்டும். பிறகுதான் போராடும குணம் வரும்.
சூடும், சொரணையும் சொல்லி வருவதில்லை, ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டிய விஷயங்கள். தமிழனுக்கு இது குறைவு என்று எண்ணுபவர்களுக்கு, நாம் யார்என்பதை உறுதியாகவும், வலுவாகவும் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
தயாரிப்பாளர் அழகப்பன்: கர்நாடகத்திற்குப் போய் படப்பிடிப்பு எதையும் நடத்த முடியாத நிலை உள்ளது. ரம்யாகிருஷ்ணனை தூக்கிப் போக முயற்சி நடக்கிறது.கே.எஸ்.ரவிக்குமார் தாக்கப்படுகிறார். சரத் குமார் தாக்கப்படுகிறார். ராம.நாராயணன் தாக்கப்படுகிறார். அப்போதெல்லாம் நாம்கண்டிக்காமல் விட்டதால் அடிக்க அடிக்க வாங்குபவன் தமிழன் என்ற நிலை வந்து விட்டது.
சரத்குமார்: காந்தி ஜெயந்தி விழாவன்று நடக்கும் இக்கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்என்று கூறி கூறியே நாம் தேய்ந்து போய் விட்டோம். தமிழன் என்ற உணர்வை மறந்ததால் வந்த வினை இது. குட்டக் குட்ட குனியும் நிலைஇனிமேலும் வேண்டாம். நாம் நடத்தும் போராட்டம் கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை ஒடுக்கும் வகையில இருக்க வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications