தமிழகத்தில் ஆய்வை முடித்தது காவிரி கண்காணிப்பு குழு
சென்னை:
காவிரிக் கண்காணிப்புக் குழுவினர் தமிழகத்தில் தங்களது ஆய்வை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினர்.
மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த இவர்கள் உடனடியாக3 ஹெலிகாப்டர்களில் மேட்டூர் சென்று அணையை பார்வையிட்டனர். அணையின் உள் பகுதிகளையும், நீர் இருப்பையும்பார்வையிட்டனர்.
இந்தக் குழுவில் தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், கர்நாடக தலைமைச் செயலாளர் ரவீந்திரா உள்ளிட்டரும் இடம்பெற்றுள்ளனர். மேட்டூர் அணையில் ஆய்வை முடித்தவுடன் நிருபர்களிடம் பேசிய ரவீந்திரா, அணையில் நீரின் அளவு குறித்துதமிழகம் முன்பு தந்த விவரங்கள் சரியாகவே இருந்தன என்று ஒப்புக் கொண்டட்.
பின்னர் அங்கிருந்து இவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தஞ்சாவூர் சென்றனர். அங்கு சிவகாமிபாளையம், ரெட்டிப்பாளையம்,ஆலங்குடி, வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் தண்ணீர் இன்று காய்ந்து கிடக்கும் பயிர்களைப் பார்வையிட்டனர்.
இன்று இவர்கள் நாகை மாவட்டம் சென்றனர். செல்லும் வழியில் திருவாரூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளின்வறட்சி பாதிப்பை ஹெலிகாப்டரில் இருந்த வண்ணம் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் பொது மக்களையும் இவர்கள் சந்தித்துப் பேசினர். இங்கும் வறண்டுபோய் கிடக்கும் நிலங்களைப் பார்த்து மத்தியக் குழுவினர் அதிர்ந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கோஸ்வாமி, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையுடன் நடந்து கொள்ளும் என்றுஉறுதியளிக்கிறேன். தமிழகத்தின் நிலையை ஆராய்ந்துவிட்டோம். நாளையே டெல்லி சென்று பிரதமரிடம் அறிக்கை தருவோம்.தமிழகத்துக்கு உரிய நியாயம் கிடைக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார்.
இதையடுத்து இந்தக் குழுவினர் இன்றே ஹிெலிகாப்டர்கள் மூலம் சென்னை திரும்பினர்.
தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு இவர்கள் இன்று இரவு டெல்லி திரும்புகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications