திபெத் மாணவிகள் சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலக அமைதியை வலியுறுத்தி இன்று சென்னையில் சுமார் 100 திபெத்தியமாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
மகாத்மா காந்தியடிகளின் 133வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நூற்றுக்கணக்கான திபெத்திய மாணவிகள் இன்று சென்னையில் அடையாள உண்ணாவிரதம்இருந்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், காந்தியடிகள் மற்றும் திபெத்தியத் தலைவர் தலாய் லாமா ஆகியோர்கடைப்பிடித்த உலக அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை வலியுறுத்தியும், திபெத் மீதான சீனஅடக்குமுறையைக் கண்டித்தும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளதாக அம்மாணவிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ்,சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் ஆகியோர் மலர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோரும் காந்தியின்சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் சர்வ மதப் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி ஒன்றும் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை காதிபவன் ஒன்றில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட ஆளுநர்ராமமோகன் ராவ், அனைவரும் கதராடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காந்தியடிகள் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அப்போது ராமமோகன் ராவ் பரிசுகளை வழங்கினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications