முதலைக் கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி: ஜெ. கடும் தாக்கு
சென்னை:
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மிகத் தவறான பொருளாதார சீர்திருத்தங்களால் தான் தமிழகத்தில் நிதிநெக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மின் கட்டணத்தையும் உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
மின் கட்டண உயர்வு தொடர்பாக அரசை விமர்சிக்கும் திமுகவையும் பா.ம.கவையும் மிகக் கடுமையாக விமர்சித்து அவர் இன்று அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:
திமுக ஆட்சியில் தான் மின்துறையில் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1999ம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியைவாங்கிக் கொண்டு அவர்கள் தந்த நிர்பந்த்தால் மின்துறை ஆணையத்தை உருவாக்கினார்.
மேலும் 2002ம் ஆண்டு செப்டம்பரில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்கவும், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் மாநிலத்தில் உள்ளஅனைத்து மின் நுகர்வோருக்கும் மீட்டர் பொறுத்துவதாகவும் தமிழ்நாட்டின் சார்பில் உறுதிமொழி தந்தார்.
இதை கருணாநிதி மறைக்கிறார். பா.ம.க., விவசாய சங்கங்கள் போன்றவை இதை மறந்துவிட்டு என்னை எதிர்க்கின்றன.
மின் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருகிறேன், கட்டணத்தை உயர்த்துகிறேன் என்று மத்திய அரசுக்கு எழுதித் தந்துவிட்டு இப்போதுஐயோ மின் கட்டணத்தை உயர்த்துகிறார்களே என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
இதற்காக கருணாநிதியும் அவரது கட்சியும் வெட்கப்பட வேண்டும்.
மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் திமுக விவசாய அணியினர் முதலில் சென்னை வந்து கருணாநிதியின் வீட்டுக்கு முன்போராட்டம் நடத்த வேண்டும். அதே போல திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பும் போராட்டம் நடத்தலாம். அது தான்நியாயயமும் கூட. அதைவிட்டு விட்டு என் அரசு மீது பாய்வது மக்களை ஏமாற்றும் செயல்.
மின் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட இந்த சீர்திருத்தங்களை இப்போது எனது அரசால் கைவிடவும் முடியாத சூழ்நிலை உள்ளது.அவ்வாறு கைவிட்டால் அது தமிழகத்துக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதனால் திமுக கொண்டு வந்த சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டிய கட்டாயத்தில் எங்கள் அரசு உள்ளது. தவறையும் செய்துவிட்டுஅரசையும் குற்றம் சொல்லும் திமுகவின் வெளிவேஷம் கலைந்துவிட்டது. திமுகவை அனைத்துத் தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.
கடந்த மாதம் பஞ்சாபில் கூட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவிலேயே விவசாயிகள்பம்ப்செட்களுக்கு இன்றும் இலவச மின்சாரம் தந்து வருவது தமிழக அரசு மட்டும் தான். இதனால் இந்த ஆண்டு ரூ. 2589 கோடியும் அடுத்தஆண்டு ரூ. 2,993 கோடியும் நஷ்டம் ஏற்படும்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதில் தமிழக அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. 1999ம் ஆண்டு மத்திய அரசுகொண்டு வந்த சட்டப்படி மின் ஆணையம் தான் இதில் எந்த முடிவும் எடுக்க முடியும். அவர்கள் சொல்வதை மாநில மின் துறைஅமல்படுத்தியாக வேண்டும் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட் எதிர்ப்பு:
இதற்கிடையே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் எனஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications