தமிழகத்தை துண்டாட சதி: திடுக்கிட வைக்கும் இமாம் அலியின் டைரி, கடிதம்
பெங்களூர்:
தமிழகத்தை இந்தியாவிடமிருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது இமாம்அலியின் கடிதம் மற்றும் டைரி மூலம் தெரிய வந்துள்ளது.
""காஷ்மீரில் வெகு விரைவில் நம் சகோதரர்கள் தனி நாடு லட்சியத்தை அடைவார்கள். அவர்கள் அங்கு வெற்றிக்கொடி நாட்டிய பின்னர் தமிழகம் தான் எங்கள் லட்சியமாகும். எங்களுடைய இந்த தர்மயுத்தத்திற்கு இஸ்லாமியநாடுகளின் ஆதரவு கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது"" என்று தன்னுடைய டைரியில் இமாம் அலிஎழுதியுள்ளான்.
விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகளை அழிப்தே எங்கள் முதல்லட்சியம். இந்துக்களைக் கொன்று எங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவோம். இதற்கு போலீசார் தடையாகஇருப்பதால் அவர்களையும் கொல்ல வேண்டியுள்ளது என்றும் அந்த டைரியில் இமாம் அலி எழுதியுள்ளான்.
தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவருக்கு இமாம் அலி ஒரு கடிதம் எழுதி அதை பேக்ஸ் மூலம் அனுப்பியுள்ளான்.இதன் ஒரிஜினல் நகல் போலீசாருக்குக் கிடைத்துள்ளது. தமிழிலேயே எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? நாங்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்என்று அல்லாவிடம் வேண்டிக் கொள்கிறேன்.
கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறேன் என்று பயப்பட வேண்டாம். நிதானமாகப் படிக்க வேண்டும். நிச்சயம் படிக்கவேண்டும்.
நாங்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம், இது தவறு என்று யாரும் சொல்லப் போவதில்லை. பொய்அல்லது பைத்தியம் ஏதும் கிடையாது. இதுவே உண்மை. இதையே தொடர வேண்டும் என்று கிளம்பியுள்ளோம்.
நாங்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்து பின் வாங்கும் கேள்விக்கே இடமில்லை. எந்த நேரத்தில் நான் சபதம்மேற்கொண்டேனோ அந்த நிமிடத்திலிருந்து என்னுடைய லட்சியத்தைச் சாதிக்கும் விஷயத்தில் தீவிரமாக இருந்துவருகிறேன்.
நான் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பது அனைத்தையும் சாதிக்க வேண்டும் என்ற முடிவோடு தான். திருமணம்செய்து கொண்டிருந்தாலும் என்னுடைய லட்சியத்தை சாதிப்பதற்காக மனைவி, இரு குழந்தைகளை விட்டு இன்றுதொலைவில் உள்ளேன்.
நான் இந்த வழியில் செல்ல யாரும் உதவி செய்யவில்லை. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து நன்றாக இருந்தேன்.ஆனாலும் இஸ்லாம் மதத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்திற்காகவே அனைத்தையும்துறந்துள்ளேன்.
எதிர்காலத்தில் எந்தத் தியாகத்திற்கும் நான் தயாராக உள்ளேன். எனது சகோதரர்கள் எனக்கு மிகவும் உதவிசெய்துள்ளனர். அவர்களை அல்லா நன்றாகக் காப்பாற்றட்டும்.
என் மனைவி, குழந்தைகளுக்கும் நான் எதையும் செய்யவில்லை. தற்போது கஷ்டத்தில் உள்ள அவர்களுக்கும்அல்லாவே பாதுகாப்பு.
முஸ்லீம்களுக்காக நான் இந்த வழியைத் தேடிக் கொண்டுள்ளேன். அதற்காக பெரும் பணக்காரர்களைக்கொள்ளையடித்து லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளேன்.
எங்கள் லட்சியங்களுக்கு இந்தப் பணம் போதாது என்பது எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் காஃபீர்(ஹிந்து)களிடமிருந்து கொள்ளையடித்து முஸ்லீம்களுக்கு கொடுப்பேன். அவர்களின் குடும்பத்திற்கு உதவியாகஇருப்பேன்.
ஏ.கே.47 போன்ற துப்பாக்கிகளைத் தயாரிக்கும் கலை மற்றும் தந்திரங்களைக் கற்றுள்ளேன் என்று அந்தக்கடிதத்தில் இமாம் அலி எழுதியுள்ளான்.












Click it and Unblock the Notifications